இளம் பெண்ணை கட்டிப்பிடித்து மாறி மாறி முத்தம் கொடுத்த நபர்! ரயில் நிலையத்தில் நிகழ்ந்த விபரீதம்!

ரயில் நிலையத்தில் திடீரென ஒரு இளம்பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பையின் புறநகர்ப்பகுதியான போவெய் அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட 2 பேரும், ஒரே தெருவில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட பெண்ணுக்கு, அந்த நபர் அவ்வப்போது, ஒருதலைக் காதல் டார்ச்சர் செய்துவந்துள்ளார். எனினும், அந்த இளம்பெண் மறுத்து வந்துள்ளார். 

இந்நிலையில், இளம்பெண், விக்ரோலியில் டியூசன் சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக, கஞ்ஜூமார்க் ரயில் நிலையம் வந்தபோது, அங்கே, அந்த நபரும் பின்தொடர்ந்துள்ளான். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், இளம்பெண்ணை கைப்பிடித்து இழுத்த, அந்த நபர், கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்துள்ளான்.

பொதுமக்கள், பலர் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.