காவேரி மருத்துவமனையில் பேரறிவாளன்..! என்னாச்சு?

பரோலில் வெளியே இருக்கும் பேரறிவாளனுக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்தி கேள்விப்பட்டு விசாரித்தோம்.


அவரது தந்தையின் பரிசோதனைக்கு வந்த இடத்தில் அவருக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் 78 வயதான பேரறிவாளைன் தந்தை ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு உடல் நலக்குறைவு காரணமாக வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் நாட்ராம்பள்ளி மருத்துவ மனையில் மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பேரறிவாளனின் தந்தைக்கு சிறுநீர் கோளாறு, நரம்பு கோளாறு, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் கோளாறு, மலச்சிக்கல் ஆகியன முற்றிய நிலையில் இருப்பதாக தகவல் தெரியவரவே, மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என்று சொன்னதால், இன்று சேர்க்கப்பட்டார். தந்தையின் சிகிச்சையை ஒரே மகனான பேரறிவாளன் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

அதேநேரம், பேரறிவாளனுக்கும் ரத்த அழுத்தம், சிறுநீர் நோய் தொற்று, முடக்குவாதம் போன்ற நோய்கள் உள்ளன. அதற்கும் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.