முதலில் மனைவி..! பிறகு மகள்..! பெரம்பலூர் பேராசிரியன் அரங்கேற்றிய பதைபதைக்கச் செய்த சம்பவம்!

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


பெரம்பலூரை சேர்ந்த சரவணன் மற்றும் அன்பரசி இருவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணமாகி, ஐந்து வயதில் ஒரு மகளும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் அன்பரசி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றுக்குள் மூழ்கிக் கிடந்தார். உடனடியாக கயிற்றைப் போட்டு அன்பரசியை மேலே தூக்கியுள்ளனர். மேலும் ஒரு வயது குழந்தையும் மூழ்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  

தீயணைப்பு படையினர் வந்து ஒரு வயது குழந்தையை சடலமாக மீட்டிருக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதில் அன்பரசிக்கு இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால் கணவர் வீட்டினர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்திருக்கின்றனர். நேற்று கணவர் சரவணன் உச்சகட்ட குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தி தனது ஒரு வயது மகளுடன் சேர்த்து அன்பரசியை கிணற்றுக்குள் தள்ளி இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.  

அன்பரசி காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார். இந்த தகவல்களின் அடிப்படையில், சரவணன் மற்றும் அவரது தாயார் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.