ஒன்றரை கிலோ! கண் இமைக்கும் நேரத்தில் நகைக் கடையில் நடந்த பகீர்! பெரம்பலூர் சம்பவம்!

பெரம்பலூர் அருகே நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 75,000 மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் இவர் வாலிகண்டபுரம் பகுதியில் சொந்தமாக ரஹமத் ஜுவல்லரி என்ற நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார். அவருக்கு உதவியாக அந்த கடையில் பத்மபிரியா என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் நகை கடைகளில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அவரது கடைக்கு வந்த 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கடைக்கு நகை வாங்க வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கேட்கும் நகைகளை இருவரும் காண்பித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 4 பெண்கள் அவர்கள் இருவரையும் திசைதிருப்பி விட்டு கண்ணாடி பெட்டிக்குள் இருந்த சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

அதன் மதிப்பு சுமார் 75000 வரை இருக்கும். இந்நிலையில் அவர்கள் சென்ற பின் எதார்த்தமாக இப்ராஹிம் கண்ணாடியை பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த வெள்ளி கொலுசுகள் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் இதையடுத்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மற்றும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளார்.அப்போது கடைசியாக வந்த 6 பேர் கொண்ட கும்பல் தான் நகையை திருடியுள்ளனர் என்பதை உறுதி செய்த பிறகு காவல்துறையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார் தடயவியல் துறையினரின் உதவியுடன் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.