உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறி எதிர்ப்பு தெரிவித்த மூப்பனார் ஆதரவாளர்கள்.

2021 தேர்தல் பிரசாரத்தை தி.மு.க. ஆரம்பித்தே விட்டது. திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இரண்டாம் கட்டமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில், திருமானூர் பகுதியில் உதயநிதி பேச இருந்ததால் அங்கு இருந்த அரங்க மேடை அலங்கரித்துவைக்கப்பட்டிருந்தது. அந்த மேடைக்கு மூப்பனார் பெயர் உள்ளூர் நிர்வாகத்தால் சூட்டப்பட்டிருந்தது.

அந்த மேடையைப் பார்த்த உதயநிதி, அதில் இருக்கும் மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டால் மட்டுமே மேடைக்கு வரமுடியும் என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த பெயர் அழிக்கப்பட்டதாக த.மா.க.னர் குற்றம் சாட்டுகின்றனர்.

திருமானூர் கண்டராதித்தம் பகுதியில் இன்று பிற்பகல் உதயநிதி கார் சென்றுகொண்டிருந்த நிலையில், அதனை தமாகா கட்சிக் கொடியுடன் சென்ற சிலர் தடுத்து நிறுத்தினர். 

மூப்பனார் பெயர் மறைக்கப்பட்டது ஏன் என உதயநிதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். எனினும், காரில் இருந்தவர்கள், தமாகாவினரை அப்புறப்படுத்தி அனுப்பினர். இதனால் உதயநிதி அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஜி.கே.மூப்பனார் பெயரை அழித்ததற்காக உதயநிதி மட்டுமின்றி திமுக நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமாகாவின் இளைஞரணித் தலைவர் யுவராஜா வலியுறுத்தியிருக்கிறார். 

ஆனால் தி.மு.க.வினரே, “திருமானூரில் ஜி.கே.மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டது திமுகவினரின் செயல் அல்ல” என்று ஜகா வாங்குகின்றனர்.

அட, போங்கப்பா.