தாலி கட்டுன கையோட இளமதியை கடத்திட்டாங்க! கதறும் கணவன்! தி.வி.க நடத்தி வைத்த கல்யாணத்தால் ஏற்பட்ட கதி!

ஈரோடு மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட, காதல் ஜோடிகளை பெண் வீட்டு உறவினர்கள் ஒன்றிணைந்து இளைஞரை தாக்கி விட்டு, மணப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் பெற்றோர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி. 23 வயது கொண்ட இந்த பெண் அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் என்பவரும் காதலித்து வந்தனர். இவருக்கு சுமார் 26 வயது இருக்கும். இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சாதி சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனை அறிந்த பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 சாதியை விட காதல் தான் முக்கியம் என்று நினைத்த இருவரும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடினர். இருவரும் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் என்பவரிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு ஈஸ்வரன் தலைமையில் சாதி சீர்திருத்த முறையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.

இதனை அறிந்த இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அடியாள்கள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் கிளம்பி திங்கள்கிழமை இரவு கொளத்தூர் வந்தனர். இருவரையும் திருமணம் கோலத்தில் கண்ட இளமதியின் பெற்றோர் கோபத்தில் ஈஸ்வரன் மற்றும் செல்வன் ஆகியோரை கடத்திச் சென்று காவிரி கரையில் வைத்து தாக்கியுள்ளது. பின்னர் அந்த கும்பல் இளமதியை கடத்தி சென்று விட்டனர்.

கொளத்தூர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மார்ச் 10ம் தேதி காலையில் பத்திரமாக மீட்டனர். பின்னர், தாக்குதலில் காயம் அடைந்த அவர்களை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து தற்போது இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சாதி மறுப்பு திருமணத்தை அறிந்த மாநில தீண்டாமை கழகத்தில் இருந்து பார்வையிட வந்த தலைவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி மனைவி இளமதியை மீட்டுத்தர உதவுதாக தெரிவித்தனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்டோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளமதியின் பெற்றோர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.