திருமண வீட்டுக்குள் போலீசுடன் வந்த விஏஓ! தாலி கட்டுவதை நிறுத்திய மாப்பிளை! நிம்மதி பெருமூச்சு விட்ட மணப்பெண்!

சேலம் மாவட்டம் எருமபாளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞனுக்கும், தருமபுரி மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்னர் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


மாணவியின் படிப்பை கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.உற்றார் உறவினர் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்ததை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி சத்திய சீலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்ற போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார். குழந்தை திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என அவர்களை எச்சரித்தார். இதையடுத்து மாணவியின் திருமணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் மாணவிக்கு 17 வயது தான் ஆகிறது என்றும் தற்போது திருமணம் செய்வது தவறு என்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அறிவுரையை ஏற்றுக்கொண்ட பெற்றோர் 18 வயதாகும்போது திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டனர். இதனால் மாணவிக்கு தற்போது நிம்மதி ஏற்பட்டுள்ளது. இனி தன்னுடைய படிப்பை எந்த தடையின்றியும் படித்து முடிப்பார்.