லட்டு கொடுத்த எடப்பாடி... காணாமல் போன பன்னீர்..!

எந்த நேரமும் ஆட்சி கலைந்துவிடும் என்ற நிலையில் இருந்த எடப்பாடியின் அரசு எப்படியோ மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. அலுவலகத்தில் இதனை லட்டு கொடுத்து கொண்டாடினார் எடப்பாடி பழனிசாமி.


எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு வந்ததும், பெருந்திரளான அளவில் வந்திருந்த கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் எடப்பாடிக்கு மாலை போட்டு வாழ்த்துக்களை கூறினார்கள். நிர்வாகிகளுடன் உற்சாகமாக உரையாடினார் எடப்பாடி.

இதனையடுத்து எடப்பாடிக்கு மலர்கொத்து, பூச்செண்டு, சால்வை முதலானவற்றை வழங்கி வாழ்த்தினார்கள். எடப்பாடியும் அத்தனை பேருக்கும் லட்டு கொடுத்து சந்தோஷப்பட்டார்.

இந்த இனிய வேளையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ.பன்னீர்செல்வம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பதுதான் கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது. கட்சி நிகழ்ச்சியில்கூட பன்னீரை ஓரங்கட்டுகிறாரா எடப்பாடி என்பதுதான் லேட்டஸ்ட் டாக். என்ன சொல்லப்போகிறாரோ எடப்பாடி?