மோடிக்கு ஜால்ரா போட எடப்பாடியும் பன்னீரும் ரெடி! வழிநெடுக பேனர் வரப்போகுது!

கடந்த முறை மோடி சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தபோது ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் வரிசையாக வந்து மோடிக்கு வரவேற்பு அளித்தது.


அப்போது தமிழக இடைத்தேர்தல் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு மோடியிடம் இருந்து சரியான பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

அதனால் அடுத்து சீன அதிபருடன் மோடி பங்குபெறும் நேரத்தில், அவரை அசத்தும் வகையில் வரவேற்பு கொடுப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதனால் மோடிக்கு பேனர் வைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையம் முதல் மகாபலிபுரம் வரையிலும் 14 இடங்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த பேனருக்கு அனுமதி கொடுக்கப்படும் பட்சத்தில், அ.தி.மு.க. சார்பில் மேலும் பல பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கேட்கப்பட இருக்கிறதாம்.

அக்டோபர் 3ம்தேதி நீதிமன்றம் இதற்கான உத்தரவு வழங்கும் என்றே தெரிகிறது. ஐந்து நாட்களுக்கு இந்த பேனர் வைக்கப்பட இருக்கிறதாம், அதனால் பார்த்துப் போங்க மக்களே.