தயிருக்கு ஜி-எஸ் டியா!!! நெல்லையில் வசூலிப்பு!!

பாளையங்கோட்டையில் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள அன்னப்பூர்ணா ஹோட்டலில் தயிருக்கு ஜி-எஸ்டி வசூலித்ததால் வாடிக்கையாளர் நீதிமன்றத்தில் புகார்.


மகாராஜன் என்பவர் வாடிக்கையாக தயிர் வாங்கி கொண்டிருந்தார்.ஒரு நாள் 40 ரூபாய் கொடுத்து தயிர் வாங்கினார்.அப்போது தயிரின் விலை 40-ரூபாய் என்றாலும் அதை பார்சல் செய்ய 2-ரூபாயும் ,ஜி-எஸ்டி வரியாக 2-ரூபாயும் சேர்த்து மொத்தம் 44-ரூபாய் உணவக நிர்வாகம் வசூலித்துள்ளது.

வாடிக்கையாளர் பால்,காய்கறி, தயிர் போன்றவற்றிர்க்கு வரி கிடையாதே என்று வாக்குவாதம் செய்துள்ளார். அதையும் மீறி அவரை கட்டாயப்படுத்தி பணத்தை வசூலித்துள்ளது.

இதனால் மனம் வாடிய மகாராஜன் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.இதனை விசாரித்த நீதிபதி தயிருக்கு ஜி-எஸ்டி வசூல் செய்ததால் தனது நுகர்வோருக்கு 10-ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்,வழக்கு செலவுக்கு 5-ஆயிரம் ரூபாய் வழங்கவும் மற்றும் தயிருக்காக வசூல் செய்த பணத்துடன் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 44 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏதேனும் தவறும் பட்சத்தில் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தயிருக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் அதனை வசூலித்த காரணத்தினால் பிரபல உணவகத்திற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.