ஒரே ஒரு கணவனுக்கு கட்டிப் புரண்டு சண்டையிட்ட 5 மனைவிகள்..! குறுக்கே வந்த குழந்தைக்கு நேர்ந்த கதி! அதிர்ச்சி வீடியோ!

பாகிஸ்தானில் ஒரே நபரை மணந்து கொண்ட 5 பெண்கள் சொத்துக்காக நடுரோட்டில் கைக்குழந்தையை பந்தாடிக்கொண்டே சண்டையிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கூட ஆகவில்லை. சுஜித்தின் பெற்றோருக்கு தாயின் அலட்சியமே காரணம் என சமூகவலைதள போராளிகள் பொங்கி எழுந்து வரும் நிலையில் கையில் குழந்தை இருப்பதை மறந்து அதை வைத்து பந்தாடிக் கொண்டே சொத்துக்காக பெண்கள் சண்டையிட்ட சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறி உள்ளது.  

பாகிஸ்தானில் ஒரே நபரை அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கிடையே திடீரென சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது வசதியான கணவனின் சொத்தை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என நினைத்த 5 பெண்கள் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். இதற்கிடையே சொத்து முழுவதையும் அபகரிக்க வேண்டும் நினைத்த மனைவிகள் ஒருவருக்கொருவர் நடுரோட்டில் நின்று சண்டையிட்டுக் கொண்டனர். 

நம்மூரில் பெண்கள் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு இழுத்து சண்டையிடுவதுபோல அந்த சண்டை இருந்தது. 

இதற்கிடையே ஒரு பெண்ணின் கையில் இருந்த குழந்தை இவர்கள் நடத்தும் சண்டைக்கு இடையே அல்லோலகப்பட்டது. குழந்தையை ஒருபெண் வீசுவதும் பின்னர் மற்றொரு பெண் எடுத்து கீழே அந்த குழந்தையை போடுவதும் என மாறி மாறி பந்தாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள உலகத்தில் சிறந்த தெய்வம் தாயைத் தவிர வேறு எதுவும் இல்லை என சொல்லும் இந்த நேரத்தில் வீடியோவை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.