தொலைக்காட்சி நேரலையில் பத்திரிகையாளரை புரட்டியெடுத்த அரசியல்வாதி! வைரல் வீடியோ!

கராச்சி: டிவி நேரலையில் பத்திரிகையாளரை அடித்து, உதைத்த அரசியல்வாதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கராச்சி பிரஸ் கிளப் தலைவராக இம்தியாஸ் கான் என்பவர் உள்ளார். இவர், கடந்த திங்கள்கிழமை இரவு 'நியூஸ் லைன் வித் அஃப்தாப் முகேரி' என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காகச் சென்றுள்ளார்.

அவருடன் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியை சேர்ந்த  மஸ்ரூர் அலி சியால் என்பவர் பங்கேற்றிருக்கிறார்.  விவாதத்தின்போது இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த மஸ்ரூர் அலி சியால் திடீரென எழுந்து பத்திரிகையாளர் இம்தியாஸ் கானை கடுமையாக அடித்து உதைத்தார். உடனே அவரும் பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆளுங்கட்சியாக உள்ள தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி நிர்வாகிகள் இப்படி பொது இடத்தில் அறிவுகெட்டத்தனமாக நடந்துகொள்வது தவறான விசயம் என்றும், அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துளள்னர்.