இன ரீதியாக பேசியதன் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமத் 4 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
பாக்கிஸ்தான் கேப்டனிற்கு 4 போட்டிகளில் விளையாட தடை

பாகிஸ்தான்
மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சர்ப்ராஸ் அஹமத் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
இந்த
போட்டியில் தென்னாபிரிக்கா வீரர் ஆண்டில் பெலுக்வயோவை இன ரீதியாக பேசியதாக
சர்ப்ராஸ் அஹமத்
மீது புகார் எழுந்துள்ளது. அவர் இன ரீதியாக பேசியது
ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளதாக தெரிகிறது.
சர்ப்ராஸ்
அஹமத் ன் இந்த செயலுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் நான் யாரையும் புண்படுத்தும் வகையில் பேசியிருந்ததால் நான் அதற்கு வருந்துகிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இவரின்
கருத்துக்கு பதிலளித்த தென்னாபிரிக்கா கேப்டன் டுப்ளசிஸ், சர்ப்ராஸ் அஹமத் ன் மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அனால் இனிமேல் இன ரீதியாக பேசாதீர்கள்
எனவும் அவர் கூறி இருக்கிறார்.
இந்த
பிரச்னையை விசாரித்த ஐசிசி பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமத் 4 போட்டிகளில் விளையாட ஐசிசி
தடை விதித்துள்ளது.