பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த இளம் மருத்துவர் பலி

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த வந்த இளம் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார். அந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் எவ்வித பாகுபாடியின்றி அனைத்து நாடுகளுக்கும் பரவி கொண்டுகின்றது. அதில் பாகிஸ்தான் மற்றும் விதிவிலக்க என்ன? பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 881 பேருக்கு பரவி உள்ளது. அங்குள்ள சிந்து மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிந்து மாகாணத்தில் தான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 394 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் ஒரே நாளில் அங்கு 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக, கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி இளம் மருத்துவர் உஷாமா ரியாஸ் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இளம் மருத்துவர் எப்படி உயிரிழக்க கூடும் என்று கேட்டகையில், கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசோதித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. கொரோனா பற்றிய அலட்சியாத்தினால் ஒரு மருத்துவர் பாகிஸ்தானில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.