அமித்ஷா 104 நாட்கள் சிறையில் இருந்ததால், அவரை விட கூடுதலாக இரண்டு நாட்கள் அதாவது 106வது நாளில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.
சிதம்பரத்துக்கு விடுதலை... விடுதலை. இனிமேல் விமர்சனத்தை தெறிக்க விடுவாரா..?

ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் ஏற்கெனவே ஜாமின் பெற்றிருந்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் காவலில் இருந்தர். இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதனை அடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்கவோ அல்லது அறிக்கை வெளியிடவோ கூடாது என்றும்,
சாட்சியங்களை நிர்பந்திக்க கூடாது, சாட்சிகளை பாதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தனை நாட்களும் சிறையில் இருந்தபடி, ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது தனது குடும்பத்தார் மூலம் ட்வீட் வெளியிட்டு வந்தார் சிதம்பரம். அமைதியாக இருந்தால் சீக்கிரம் விடுதலை ஆகிவிடலாம் என்று பலர் அவரிடம் சொன்னபோதும், அவரது இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. விடுதலை வேண்டும் என்பதற்காக அரசுக்கு ஜால்ரா போடவும் இல்லை.
இப்போது பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால், இனிமேல் ப.சிதம்பரம் வழக்கத்தைவிட காரசாரமாக விமர்சனம் செய்வார் என்றே எதிர்பார்க்கலாம்.