ப.சிதம்பரம் கேட்ட ஒரே ஒரு கேள்வி! நாடாளுமன்றத்தில் 45 நிமிடங்கள் கதறிய நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சர் பசிதம்பரம் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு சுமார் 45 நிமிடங்கள் பதில் அளித்து கதறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.


நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் பேசினார். அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல ஒவ்வொரு ஆண்டும் இயல்பாகவே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதாரம் இரட்டிப்பாவது இயல்பான ஒன்று எனவும் இதில் மோடி அரசு பெருமை கொள்ளத் தேவையில்லை என்றார். அத்தோடு இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் கொண்டதாக மாற தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சிதம்பரம் கூறினார்.

இவ்வாறு நேற்று ப.சிதம்பரம் பேசியிருந்தார். இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு இன்று பதில் அளித்து நிர்மலா சீதாராமன் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அவர் பதில் அளித்தார். ஆனால் சுமார் 45 நிமிடங்கள் பசிதம்பரம் கேட்ட கேள்விக்கு தான் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அதாவது இந்தியா எப்படி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆகும் என்கிற கேள்விக்கு தான் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவரது முகம் மிகவும் வாடியிருந்தது. சில சமயம் நிர்மலா சீதாராமன் பேச்சில் அனல் பறந்தது. ஆனால் அதன் பிறகு அவரது பேச்சில் ஸ்ருதி குறைந்தது. எதையோ பேச வந்து வேறு எதையோ பேசியது போல் இருந்தது.

ஒரே ஒரு கேள்வி கேட்ட முன்னாள் நிதி அமைச்சர் பசிதம்பரத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் தற்போதையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொன்னது தான் தற்போது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.