சிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்! சிதம்பரத்தின் ஆடிட்டரும் சிக்குகிறாரா?

சிதம்பரத்திற்கு நாளை அதாவது செப்டம்பர் 16ம் தேதியன்று 74வது பிறந்த நாள்.


இந்த நாளில் அவர் சிறையில் இருக்கவேண்டும் என்பதுதான் பாஜ.க.வின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேறுகிறது. இந்த நாளில் சிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக மேலும் சில சிக்கல்களைத் தருவதற்கு சி.பி.ஐ. தயாராகிறது.

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை அடுத்து, சிதம்பரத்தின் உதவியாளர் கே.வி. பெருமாளை அப்ரூவர் ஆக்கும் முயற்சியில் சி.பி.ஐ. இறங்கியுள்ளது. பெருமாளின் இல்லத்திற்கு திடீரென சென்ற சி.பி.ஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேல் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் போது , மும்பையை ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு அனுமதி வழங்கியது குறித்தும் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி பற்றியும் ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கொடுப்பதற்கு பல கோடி ரூபாய் கைமாறியது தொடர்பாகவும் விசாரித்துள்ளனர். பெருமாள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் சிதம்பரத்துக்கு சிக்கல் உண்டாக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிதம்பரத்துக்கு மேலும் சிக்கல் தரும் வகையில், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளார். ஏற்கெனவே அமலாக்கத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார் என்றாலும், முழுமையான தகவல் தராத பட்சத்தில் இவரை கைது செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹேப்பி அட்வான்ஸ் பர்த் டே சிதம்பரம்.