வாரத்தில் இனி 3 நாட்கள் லீவ்..! 4 நாட்கள் தான் வேவை..! பிரதமரின் அதிரடி திட்டம்!

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் தெரிவித்துள்ளார்.


வேலை நாட்களை குறைத்து, நேரத்தையும் 8 மணியில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

வேலை நேரத்தைக் குறைப்பதால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் பணியாளர்களால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

பின்லாந்து நாட்டில் 1996இன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 3 மணி நேரத்திற்கு முன்னதாகவோ, 3 மணி நேரம் களைத்து தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

பின்லாந்து நாட்டின் அண்டை நாடான சுவீடன் 6 மணி நேர வேலை நாட்களை செயல்படுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்வீடிஷ் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கூட அதிக திருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.