காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் கொடூர இளைஞன்! திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்!

லக்னோ: ஒருதலைக் காதல் என்ற விபரீதம் காரணமாக, 22 வயது இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் பாஹூபுரா  கிராமத்தில் வசித்து வந்த 22 வயது இளம்பெண் ஒருவரை, இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதுபற்றி பலமுறை அந்த பெண்ணை டார்ச்சர் செய்தும் வந்துள்ளார்.

இதன்பேரில், பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், உரிய பாதுகாப்பு வழங்க போலீஸ் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த இளைஞர் வற்புறுத்தி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த இளைஞர், துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதால், போப் பகுதி போலீஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.