ஏன் மாமா இப்படி பண்றீங்க..! கதறிய மருமகளுக்கு மாமனாரால் ஏற்பட்ட விபரீதம்! வேடிக்கை பார்த்த காதல் கணவன்!

ஜோடி திருமணம் செய்துகொண்ட நிலையில் கணவர் தன்னுடன் சேர்ந்து வாழாததால் ஒரு மாதத்தில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை ஆவடி அருகே உள்ள சிஆர்பிஎஃப் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ராஜா 62, இவர் ஒரு ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் அலுவலராவார். இவரது மகள் ராதா 23, இவர் சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி 27, என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்தனர்.

நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராதாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் பெற்றோர்களும் இவர்களது காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்களது காதலுக்கு இடையூறாக இருப்பதால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இதையடுத்து அவரது நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு பாலாஜி வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து திருமணமாகி சில நாட்கள் நன்றாக சென்ற நிலையில் பாலாஜி மதுபோதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதையடுத்து தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருப்பதாகவும் அவளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக பாலாஜியும் தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து ராதாவின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி ராதாவை அவர்களது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து சில நாட்கள் ஆகியும் பாலாஜி ராதாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த ராதா பாலாஜியின் வீட்டிற்கு சென்று தனது கணவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தந்தை மற்றும் பாலாஜி இருவரும் சேர்ந்து ராதாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ராதா வீட்டிற்கு வந்து தனது பெற்றோர்கள் தேவாலயம் சென்றபோது வீட்டிலிருந்த பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களது பெற்றோர்கள் ராதாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து திருமணமாகி ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜி மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.