"ஒரே நாடு- ஒரே ரேஷன்" திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..!

குடும்ப அட்டைதாரர்கள் நாடு முழுவதிலும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்ற "உள்மாநில பெயர்வு திறன் " திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி உள் மாவட்டங்களில் இருக்கும் மக்கள் இந்த ரேஷன் கடைகளில் வேண்டுமென்றாலும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது தற்போதைக்கு முதல்கட்டமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வரும் ஜூன் மாதம் முதல் இந்திய நாடு முழுவதும் "ஒரே நாடு - ஒரே ரேஷன்" என்ற கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அதற்கான சோதனை ஓட்டமாக தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் முதற்கட்டமாக " ஒரே மாநிலம் - ஒரே ரேஷன்"  என்ற கொள்கையை அமல்படுத்த வழிவகுத்துள்ளது.

தற்போது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த திட்டமானது மற்ற மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.