அதிவேகம்..! சடன் பிரேக்..! பற்றி எரிந்த ஆம்னி வேன்! மதுரை பரபரப்பு!

மதுரை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதிகள்.


தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரையில் வசித்தும் வரும் தம்பதிகள் தான் வெங்கடேசன் மற்றும் சாருலதா. கணவன், மனைவி இருவரும் திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காண மாருதி ஆம்னி வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த நிலையில் ஆம்னி வேன் கூத்தியார் குண்டு என்ற இடத்தின் அருகில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஆம்னி வேன் தீ பிடித்தை அறிந்த ஓட்டுனர் மற்றிம் தம்பதிகள் உடனடியாக வேனை நிறுத்திவிட்டு வெளியில் இறங்கினார்கள். இதனால் ஓட்டுநரும் வெங்கடேசனும், சாருலதாவும் உயிர் தப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் திடீரென தீபிடித்தை, தீயணைப்புத் துறையினர் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஆம்னி வேனின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிந்து விட்டது.

பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர், ஆம்னி வேன் ஏன் தீபிடித்து என்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தம்பதிகள் சென்ற ஆம்னிவேனில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக எல்.பி.ஜி. எரிவாயு பொருத்தி இயக்கி வந்துள்ளனர். எல்.பி.ஜி. எரிவாயுக் கசிவால் ஆம்னி வேன் தீப்பிடித்திருக்கக் கூடும் என்றும் காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளன.