2 ரூபாய் டாக்டர் மறைந்தாலும் 2 ரூபாய்க்கு சிகிச்சையை தொடரும் டாக்டர் மகன், மகள்! நெகிழும் மக்கள்!

சென்னை பழைய வண்ணாரப்பேடையில் நோயாளிகளிடம் வெறும் 2 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித மருத்துவர் ஜெயச்சந்திரனின் சேவையை அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வருகின்றனர்.


பழைய வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்பவர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். தனது வாழ்நாள் முழுவதும் நோயாளிகளிடம் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டு சிகிச்சையளித்துக் காப்பாற்றி வந்த ஜெயச்சந்திரன் ஏழை மக்களுக்கு கடவுளாகவே தெரிந்தவர் என்றால் மிகையில்லை 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த ஜெயச்சந்திரனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். இந்நிலையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் இறந்துவிட்டாலும் அவரது சேவை நின்றுவிடாமல் அவரது குடும்பதினர்  அதனைத் தொடர்ந்து வருகின்றனர். 

மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவி வேணி. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய இவர், தற்போது குரோம்பேட்டை தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் ஜெயச்சந்திரனின் மகன் சரத் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெயச்சந்திரனின் சேவைநின்றுவிடாமல் தாங்கள் தொடர்ந்துவருவதாக அவர்கள் தெரிவித்தனர். 

தனது தந்தை இறந்த பின் அவரைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க வந்ததைப் பார்த்த போதுதான் தனது தந்தையின் மருத்துவ சேவையின் மகத்துவம் புரிந்ததாகக் கூறுகிறார் சரதநோயாளிகளிடம் பணம் வாங்குவதில்லை எனவும், நோயாளிகள், தங்களால் முடிந்த இரண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ தனது தந்தையின் படத்தின் முன் உள்ள உண்டியலில் போட்டுவிட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.