சாரி தெரியாமல் வந்துவிட்டேன்! பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த கிழத்திற்கு நேர்ந்த விபரீதம்! கொடைக்கானல் பரபரப்பு!

கொடைக்கானலில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த கிழவனை ஊர் மக்கள் கட்டி வைத்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


 கொடைக்கானல் பகுதியை அடுத்த மேல்புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கிழட்டு பருவத்தை அடைந்த சங்கர் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அடிக்கடி பெண்கள் கழிப்பறைக்கு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்து விட்டு தெரியாமல் வந்து விட்டேன் என்று கூறி சில்மிஷ சேட்டைகளை செய்து வந்துள்ளார்.

இதனை விரும்பாத அவரது மனைவியும் கண்களும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இருந்தபோதிலும் அவரது சேட்டை அப்பகுதி ஊர் மக்களிடையே தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக காலையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்றைய தினம் காலையில் 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விறகு அடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அப்பெண்ணை வழி மறைத்து பாலியல் தொந்தரவு அளிக்க மனமுடைந்த அப்பெண் அவர் கணவரிடம் ஓடிச் சென்று புகார் அளித்தார். இதையடுத்து அவர் கணவர் ஊர் மக்களை திரட்டிச் சென்ற நிலையில், அவரைத் தேடி கண்டு பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

பின் கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இவர் பல ஆண்டுகளாக அப்பகுதி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் கொடைக்கானல் பகுதியில் போதை காளான் உற்பத்தி செய்து விற்ற வழக்கும் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.