கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு கோயம்பேடு சந்தை இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து திருமழிசையில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.


ஆனால், அங்கு காய்களை பாதுகாப்பதற்கு வசதி இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருப்பதால், மீண்டும் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் எனவும் வணிகர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அண்மையில் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். அதன்பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோயம்பேடு சந்தையைத் திறக்கவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.