அ.தி.மு.க.வின் வெற்றியை துண்டுச்சீட்டு பறிக்க முடியாது… தெறிக்கவிட்ட குத்தீட்டி.

’திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; என்று தேய்ந்த ரிகார்டையே திருப்பித்திருப்பி பேசிவருகிறார் உதயநிதி. அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக , அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி பகுதியில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


சமீபத்தில் நடந்து முடிந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் திமுகவை சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தோற்கடித்த இயக்கம் அதிமுக. அது மட்டுமல்ல, 5 தொகுதிகளின் வெற்றியே அதிமுக ஆட்சிக்கு போதுமானது என்ற நிலையில்

இரட்டிப்பாக 9 தொகுதிகளில் வெற்றியை பெற்றதும், எளிமை சாமானியர் எடப்பாடியாரின் நல்லாட்சிதான். அவ்வழியிலே இப்போதும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டி ஆட்சியில் இருந்து கொண்டே

மூன்றாம் முறையாக ஆட்சியை தொடர்கிற அதிசயத்தை நிகழ்க்தயிருக்கிறது. ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த இரட்டைஇலை இயக்கம்.

கழகத்தின் வெற்றியை தடுப்பதற்கு அவதூறுகளை மட்டுமே முன் வைத்து அரசியல் நடத்தும் மு.க ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்கள் தரப்போகிற தீர்ப்ப மூக்கறுப்பு என்பது மட்டும்தான். உழவன் விட்டில் உதித்த உழவனாக, ஒரு விவசாயி விட்டில் விளைந்த வெள்ளந்தி தலைவனாக, 2021ல் முதலமைச்சர் இருக்கையை அலங்கரிக்க காத்திருப்பவர் எடப்பாடியார் என்பது திமுகவினருக்கே தெளிவாக தெரிந்துவிட்டது.

அதனால்தான் விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டம் எடுக்கிற தொடை நடுக்க கும்பலாக திமுக பிரச்சாரம் என்ற பெயரிலேயே அபச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால் கழகம் செய்திருக்கும் சாதனைகளை கண்ணியத்தோடு எடுத்து வைத்தாலே போதும் அது 200 தொகுதிகளுக்கு மேலாக வெற்றியை அள்ளிக் கொடுக்கும் என்று பெருமிதத்தோடு பீடுநடை போடுகிறது அதிமுக.

காவிரி உரிமையை மீட்டு கழனிவாழ் உழவினத்தின் நீரோட்டம் காத்து… மீத்தேனை துரத்தி, மின் மிகை மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு, சமூகநீதி காத்த 11 மருத்துவ கல்லூரிகளுக்கு புறப்பாடு புரிந்து அத்திக்கடவு அவினாசி திட்டம் தந்து இன்னும் இன்னுமாக பட்டியலிட முடியாத அளவுக்கு சாதனைகளைப் புரிந்து, தெம்போடு கொடி பிடிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியை துண்டுச்சீட்டு கோமாளிகள் தடுக்கவும் முடியாது. கழகத்தின் மிடுக்கை இன்னும் குறைக்கவும் இயலாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.