5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு என்ற அதிரடிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில், அடுத்த அதிரடியாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புளூபிரின்ட் கிடையாது, புத்தகத்தில் எங்கிருந்தும் கேள்விகள் வரும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வித் துறை அடுத்த அதிரடி! புளூபிரிண்ட் கிடையாது என்பதால் 10, 11, 12ம் வகுப்புக்கு முழு புத்தகத்தையும் படிக்க வேண்டுமாம். முட்டை மதிப்பெண் ஜாக்கிரதை.
அதாவது, புத்தகம் முழுவதும் ஒரு மாணவர் படித்தால்தான், அவரால் எளிதில் நீட் போன்ற தேர்வுக்குத் தயாராக முடியும் என்று தெரிவிக்கிறது கல்வித் துறை. ஆனால், இத்தனை காலமும் மனப்பாடம் செய்து படித்துவந்த மாணவர்களிடம், திடீரென தேர்வு முறை மாறுகிறது என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும், கிராமப்புற மாணவர்களில் பெரும்பாலோர் காலை, மாலை நேரங்களில் குடும்பத்துக்கு வேலை செய்துகொண்டு, இடைப்பட்ட நேரத்தில் படிக்கிறார்கள். அதனால், அவர்களால் இன்றைய தேர்வு முறையை எதிர்கொள்வதே கடினமாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படி ஓர் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், ஏகப்பட்ட மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்புதான் கிடைக்கும் என்பதை சொல்லவே இல்லை.
அதே நேரம் மாணவர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பை ரஷ்யாவில் கொடுப்பதே இல்லை. ஏன் தெரியுமா?
அவன் மற்ற மாணவர்களைப் போல் காலை எழுந்து பள்ளிக்கு வருகிறான், பாடங்களைப் படிக்கிறான், பரீட்சை எழுத முயற்சி செய்கிறான். அவனுக்குப் பதில் தெரியவில்லை அல்லது நாம் அவனுக்கு தெளிவாக கற்றுத்தரவில்லை என்பதற்காக அவனுக்கு எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கமுடியும் என்று கேட்கிறார்கள்.
நியாயமான கேள்வி, நம் கல்வித்துறை காதில் விழுமா?