T20 போட்டிகளில் இவர் தான் நம்பர் 1.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது T20 போட்டியில் ரோஹித் சர்மா 50 ரன்கள் அடித்ததன் மூலமாக T20 அரங்கில் அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய போட்டியில் கேப்டன் மற்றும் தொடக்கஆட்டக்காரரான ரோஹித் சர்மா அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

 இவர் இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலமாக T20 போட்டிகளில் 2288 ரன்களை எடுத்து சர்வதேச அளவில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் 2272 ரன்களை இதுவரை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 2263 ரன்களை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.