பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, குழந்தை கடத்தல் புகாரில் சிக்கியுள்ளார்.
ஆசிரமத்தில் சிறுமிகளை வைத்து..! நித்யானந்தா பெண்கள் சீடர்கள் 2 பேர் சிக்கினர்..! அதிர்ச்சியில் பக்த கோடிகள்!

தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தா, கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து, சாமியார் என்ற
பெயரில் சுகபோக வாழ்வு வாழ்ந்து வருகிறார். இவரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் வகையில்
சில ஆண்டுகளுக்கு முன்பாக, ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்குப் பிறகுதான் நித்யானந்தாவிற்கு மார்க்கெட் உயர்ந்தது. ஆம்,
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண், பெண்கள் ஏராளமான அளவில்
நித்யானந்தா மடத்தில் சீடர்களாக தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
எனினும், நித்யானந்தா ஒரு சபல புத்தி கொண்ட நபர் என்றும், சாமியார் என்ற பெயரில் பலரை பாலியல் ரீதியாக மோசடி செய்துவருகிறார் என்றும் புகார் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் கூட நித்யானந்தா மடத்தில் சிஷ்யையாக இருந்த கனடா பெண் ஒருவர் தப்பி தாய்நாட்டிற்குச் சென்றதோடு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் தற்போது நித்யானந்தா மீது குழந்தை கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நித்யானந்தா மடம் ஒன்று செயல்படுகிறது. இங்கு வெளியூரில் இருந்து 4 குழந்தைகளை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளதாக, பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
இதன்பேரில் போலீசார் சோதனையிட்டபோது, 4 குழந்தைகளை அடைத்து வைத்திருந்த உண்மை தெரியவந்தது. உடனடியாக, அந்த குழந்தைகளை மீட்ட போலீசார் இதுபற்றி வழக்கு பதிந்து சாத்வி பிரான்பிரியானந்தா மற்றும் பிரியதத்துவா எனும் 2 பெண்களை கைது செய்துள்ளனர். இவர்களுக்கு தலைவராகச் செயல்படும் நித்யானந்தா மீதும் போலீசார் குழந்தை கடத்தல் பிரிவில் வழக்குப் பதிந்துள்ளனர். அதேசமயம், நித்யானந்தா ஏற்கனவே வேறு சில குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தலைமறைவாக உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.