மனைவி நித்யாவுக்கு கள்ளக் காதலனை அறிமுகம் செய்து வைத்ததே தாடி பாலாஜி தானாம்! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே நடைபெற்று வரும் குடும்ப சண்டையில், புதிய தகவல் வெளியாகியுள்ளது.


ஆம். டிவி செலிபிரிட்டி மற்றும் சினிமா நடிகராக, பிஸியாக வலம் வரும் தாடி பாலாஜி, சொந்த வாழ்வில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லாதபடி, கடும் மன உளைச்சலில் உள்ளார்.  கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாடி பாலாஜி, எனது குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ்தான் காரணம். அவருக்கும், என் மனைவிக்கும் இடையே ஏதோ ஒரு ரகசிய தொடர்பு உள்ளதாக, எனக்குச் சந்தேகம், என்று குற்றம் சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபற்றி , அவரது மனைவி நித்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோஜை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே தாடி பாலாஜிதான். அவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். சொந்த நண்பனை, என்கூட தவறாக அர்த்தப்படுத்தி பேச பாலாஜிக்கு எப்படி மனசு வந்ததே என்று தெரியவில்லை.

எங்களுக்கு இடையே உள்ள பிரச்னையை சட்டப்பூர்வமாக பேசாமல், மீடியா முன்பு, பலவிதமாக உளறி, வதந்தி பரப்புவதை மட்டுமே வேலையாக பாலாஜி செய்துவருவது, வேதனையாக உள்ளது, என்றும், நித்யா குறிப்பிட்டுள்ளார்.