அரசியல் வியாபாரி பிரசாந்த் கிஷோர்... வெளுத்துவாங்கும் நிதீஷ் குமார்!

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார் பிரசாந்த் கிஷோர்.


இந்த நிலையில் நிதீஷ் குமாருக்கும் மோடிக்கும் கூட்டணி அமைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை விமர்சனம் செய்தார் பிரசாந்த்கிஷோர். அதனால், அவரது பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், முதல்வர் நிதீஷ்குமார் பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதாவது, ‘‘முதல்வர் நிதீஷ்குமார், காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு, மோடியின் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறார். ஒரே நேரத்தில் காந்தியாகவும், கோட்சேவாகவும் இருக்க நினைக்கிறார். ஆனால், நான் எப்போதும் மாற மாட்டேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த விஷயத்தில் கடுமையாக கோபம் அடைந்திருக்கும் நிதீஷ்குமார், இன்று பிரசாந்த் கிஷோர் பற்றி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரசாந்த் கிஷோர் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. அவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர்தானே மோடியை பிரதமராக கொண்டுவர வேண்டும் என்று திட்டம் வகுத்தா.

பணம் கொடுத்தால் நொடிக்கு நொடி மாற்றிக்கொள்ள அவேண்டுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பிரசாந்த் கிஷோர் நியாயமே இல்லாத வேலை செய்கிறார் என்று நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பதிலடி கொடுத்துவருகிறது. பிரசாந்த் கிஷோருக்குத் தேவையான நேரத்தில் மட்டும்தான் மோடியுடன் உறவாட வேண்டுமா என்று கேட்கின்றனர். 

ஆஹா... மோதல் முத்திடுச்சே...