என்னாது... படிக்கும் புள்ளைங்க வயிற்றில் அடித்தாரா நிர்மலா சீதாராமன்? பட்ஜெட் குளறுபடி

பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுறதுக்காக பிச்சைகூட எடுப்பேன் என்று சொன்னார் பெருந்தலைவர் காமராஜர்.


மதிய உணவு படைத்தால் நிதி போதாது என்று அதிகாரிகள் சொன்ன நேரத்தில், ‘எப்படி நிதி ஆதாரம் கொண்டுவருவது என்று பாருங்கள். அதுதான் உங்கள் வேலை’ என்றும் சொன்னார்.

ஆனால், இன்றைய அரசு பட்ஜெட்டில் புத்திசாலித்தனமாக குழந்தைகள் வயிற்றில் அடித்துள்ளது. ஆம், மத்திய பட்ஜெட்டில், குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்ட நலவாழ்வு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 27,000 கோடியிலிருந்து 22,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பள்ளி செல்லும் குழந்தைகளின் மதிய உணவு போன்றவற்றிற்காக நிதி 11,000 கோடியிலிருந்து 9,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நமது தமிழ் நாட்டில் இதனால் நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது. ஏனென்றால் மாநில அரசே குழந்தைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனால் வட மாநில குழந்தைகளுக்குத்தான் பெரும் ஆபத்து வந்திருக்கிறது. இப்படி எல்லாம் நிதியைக் குறைத்து அரசு எங்கே போய் சேர்க்கிறது என்று பார்த்தால், அவமானமாக இருக்கிறது. ஆம், ராணுவத்துக்கும் காஷ்மீரில் ஆப்பிள் பறித்து கொண்டுவருவதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.

என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா...