ஒதுங்கிய ஜேட்லி! நிதி அமைச்சர் ஆகிறார் நிர்மலா சீதாராமன்!

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று கோரி பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அவர் வகித்து வந்த நிதித்துறை அமைச்சர் பதவி காலியாக உள்ளது.

இதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படுவார் என்று பேசப்படுகிறது. இதனால் தனது பாதுகாப்பு துறை இலாகாவை இழக்கும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிப்பது குறித்து மோடி அமித்ஷா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ரயில்வே துறையை கவனித்து வரும் பியூஸ் கோயல் தான் முதலில் நிதித்துறை அமைச்சர் பதவிக்கு பரிசீழிக்கப்பட்டார். ஆனால் அவர் ரயில்வே துறையை சிறப்பாக கவனித்து வருவதால் அந்த பதவியில் தொடரச் செய்ய மோடி முடிவு செய்து விட்டதாக சொல்கிறார்கள். எனவே நிதியமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு தன் வழங்கப்படும் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.