இப்போ ஏன் வந்தீங்க? ஆ.ராசாவை ஓட ஓட விரட்டிய நீலகிரி மக்கள்! வைரல் வீடியோ!

நீலகிரியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அத்தொகுதி எம்பி ஆ.ராசாவை கிராம மக்கள் விரட்டி அடித்தனர்.


கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தை முழுமையாக மலை புரட்டிப் போட்டது. சுமார் 144 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நீலகிரி மற்ற மாவட்டங்களுடன் தொடர்பை இழந்தது.

சாலைகளில் மண்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு ஒரு வழியாக முதற்கட்டமாக சாலைகள் சரி செய்யப்பட்டன. இதனை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்துக் கொண்டு ஆ.ராசா நீலகிரி சென்று மழை பாதிப்புகளை பார்வையிட்டார்.

ஸ்டாலின் இரண்டு நாட்களில் அங்கிருந்து திரும்பிவிட்டார். ஆனால் ஆ.ராசா அங்கேயே முகாமிட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மலைக்கிராமம் ஒன்றுக்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆ.ராசா சென்றார்.

வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த ஆ.ராசா அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். அப்போது துக்கம் விசாரிக்கவா வந்தீர்கள் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிறது ஏதேனும் நிவாரணப் பொருட்கள் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கிராம மக்கள் ராசாவை சூழ்ந்தனர்.

ஆனால் ராசா மற்றும் கட்சியினர் நிவாரணப் பொருட்கள் எதையும் கொண்டு செல்லவில்லை. ஆனால் கிராம மக்கள் விடாமல் துரத்தினர். இதனால் விட்டால் போதும் என்று ஆ.ராசா மற்றும் கட்சியினர் அங்கிருந்து தப்பி ஓடினர்.