ப.சிதம்பரத்துக்கு அடுத்து ஒரு சிக்கல்! பார் கவுன்சில் நோட்டீஸ்!

பட்ட காலிலே படும் என்பதற்கு உதாரணமாக இப்போது ப.சிதம்பரத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துவருகிறது. சம்பந்தமில்லாத பகுதியிலிருந்து எல்லாம் சிதம்பரம் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.


ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், இதுவரை அமைதியாக இருந்த பார் கவுன்சில், இப்போது திடீரென நோட்டீஸ் கொடுத்து டென்ஷன் ஆக்கியுள்ளது. அதாவது மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை குற்றவாளிகளாக இருக்கும் சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோர் பயன்படுத்தக் கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் எழுந்து கிட்டத்தட்ட எட்டு  மாதங்கள் ஆகிறது. அதாவது ஜனவரி மாதம், கோபிகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு புகார் கடிதம் எழுதினார். அதில், ’ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ப.சிதம்பரம்மீது சிபிஐ, வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளன.

இதுகுறித்த  விசாரணையின்போது சிதம்பரம் மூத்த வழக்கறிஞருக்கான அங்கியுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். இது அதிகார துஷ்பிரயோகம்”  என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை அமைதி காத்த பார் கவுன்சில், திடீரென ஆகஸ்ட் 24 அன்று சிதம்பரத்துக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

சிதம்பரத்துக்கு நேரம் சரியில்லைன்னுதான் சொல்லணும்!