நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக தலைமையில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராவார் என்று நான்கு முக்கிய ஆங்கில ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் மோடிதான் பிரதமர்! 4 முக்கிய ஆங்கில ஊடகங்கள் பளீர் கருத்து கணிப்பு!

ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் இன்றோடு முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமாக இருக்கக் கூடிய அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஆங்கில ஊடகங்கள் ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18, ndtv மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சிகளும் கருத்துக்கணிப்புகளை எடுத்து வெளியிட்டுள்ளன.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 306 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்களும் இதர கட்சிகள் 104 இடங்களிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது.
இதேபோல் என்டிடிவியின் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 300 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 127 இடங்களும் இதர கட்சிகள் 115 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற ndtv கூறியுள்ளது.
அதேசமயம் ரிபப்ளிக் தொலைக்காட்சி 287 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணித்துள்ளது. இதர கட்சிகள் 127 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் ரிபப்ளிக் தெரிவித்துள்ளது.
நியூஸ் 18 கருத்துக் கணிப்பின் படி 292 முதல் 312 இடங்களை பாஜக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 62 முதல் 75 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் இதர கட்சிகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும் 18 தெரிவித்துள்ளது.
இந்த நான்கு ஆங்கில ஊடகங்களுமே 290 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இதன் அடிப்படையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்பது இந்த கணிப்பின் மூலம் தெரியவருகிறது.