மார்ட்டின் குப்தில் அதிரடியில் வீழ்ந்த வங்காளதேசம்!

நியூஸிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்களை எடுத்தார்.

முகமது சைபிதின் 41 ரன்களை எடுத்தார். வங்காளதேசம் அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 48.5 ஓவர்களில் 232 ரன்களை எடுத்தனர்.

நியூஸிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் மற்றும் மிட்செல் சாண்ட்னெர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். நிக்கோலஸ் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் சிறப்பாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து அவுட் ஆகாமல் 117  ரன்களை குவித்தார்.ரோஸ் டெய்லர் அவுட் ஆகாமல் 45 ரன்களை எடுத்தார்.

அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதனால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது. சிறப்பாக விளையாடிய மார்ட்டின் குப்திலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.