ஓடும் ரயிலில் செல்போன் கேமராவை வைத்துக் கொண்டு இளம் பெண் செய்த செயல்! வைரல் வீடியோ!

அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண் ஒருவர் ரயிலில் பயணிக்கும்போது கவர்ச்சியாக செல்பி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 9 மில்லியன் நெட்டிசன்கள் பார்த்துள்ளனர்.


செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருக்கும் செல்பி எடுப்பது என்பது அலாதி பிரியம்தான். இதற்காக அவர்கள் ரயிலில் தொங்குவது போலவும், மலை உச்சியில் நிற்பது போலவும், வானுயர்ந்த கட்டிடத்தின் சுவற்றில் நிற்பது போலவும் விலங்குகளுடன் நிற்பது போலவும் என செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு போட்டோ பதிவிடுகின்றனர்.

இதுபோன்ற அபாயகரமான செயலில் ஈடுபடும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பதும் தொடர்ந்த கொண்டுதான் இருக்கிறது இதுபோன்று வித விதமாக அபாயகரமான பகுதிகளில் நின்று செல்பி போட்டோ, வீடியோ எடுப்பதும் பின்னர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக் அள்ளுவதும் பின்னர் விமர்சனங்களை எதிர்கொள்வதும் என இளைஞர்களின் வாடிக்கையாகி போனது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் ஜெசிகா ஜார்ஜ் என்பவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பல பயணிகள் தன்னை பார்க்கிறார்கள் என்ற கூச்சம் இல்லாமல் செல்போனை ரயில் இருக்கையில் வைத்து விட்டு தன்னை கவர்ச்சியாக செல்பி எடுத்துள்ளார். இதை பார்த்த சக ரயில் பயணி ஒருவர் அவர் செல்பி எடுப்பது தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதுவரை 9 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இப்படி செய்வது துணிகரமான செயல் என பலர் பாராட்டு தெரிவித்தாலும் ஜெசிகாவின் புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் பார்த்த பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து நம்மூர் பாஷையில் அவரை கழுவி கழுவி ஊற்றியுள்ளார்கள்.

அதே போன்ற செயல்களைத்தான் நம்மூரிலும் டிக் டாக், பேஸ்புக்கில் வித விதமாக டயலாக் பேசுவதும், பாடல் பாடுவதும், அட்வைஸ் செய்வதும், கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடுவதும் என இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்தக் டிக் டாக் காட்சிகளை பார்த்து தன்னிடம் பழகும் ஆண்களை நம்பி ஏமாந்து பாதை மாறி தன்னுடைய அழகான குடும்பக் கூட்டை சின்னா பின்னாமாக்கிக் கொண்டதெல்லாம் வேறுகதை.

தொழில்நுட்ப வளர்ச்சி ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தலாமே தவிர அற்ப லைக்குகளுக்கு பயன்படுத்துவதால் நமது குடும்பத்திற்கு என்ன பயன்?