காதலனுடன் ஓடிய இளம்பெண் தூக்கில் தொங்க விடப்பட்ட கொடூரம்! காதல் கணவன் வெறிச் செயல்?

திருவாரூரில் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இளம் ஜோடி, குடும்பத் தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25), குண சுந்தரி (23) இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டில் கடும் எதிர்ப்புக் காரணமாக கடந்த மாதம் வீட்டை வீட்டு வெளியேறினார்கள். தஞ்சை ஒரத்த நாடு அருகில் கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்துவந்தனர்.

இந்த நிலையீல், கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மனைவி குணசுந்தரி வீட்டில் தனியாக தூக்கில் தொங்கிய படிக்கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவத்தன்று முதல், கணவர் சிவக்குமார் தலைமறைவாக இருந்து வருகிறார். குணசுந்தரி இறப்பு தற்கொலை தானா அல்லது கணவரின் தூண்டுதலின் பேரில் தற்கொலை செய்துக்கொண்டாரா? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.