தமிழகத்தை மிரட்டும் புதிய புயல்! என்ன பெயர் தெரியுமா?

புதிதாக உருவாகும் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது.


அதிராமபட்டிணம் - மணல்மேல்குடி பகுதிக்கு இடையில் புயல் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வகுமார். கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமான அளவில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது கட்டுக்கடங்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வகுமார்.

தமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும் - வானிலை ஆர்வலர் செல்வகுமார். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை ஆர்வலர் செல்வகுமார்.