புவனேஷ்வர்: திருமணமாகி ஒரே மாதத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருமணமாகி 30 நாட்கள்..! நடு வீட்டில் சடலமாக தொங்கிய மருமகள்..! நேரில் பார்த்து மாமியார் சொன்ன தகவல்!

ஒடிசா மாநிலம், சுந்திகடேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இளம்பெண்ணான இவரும் முன்னா என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், ஒன்றரை மாதத்திற்கு முன் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். பிறகு, சில நாட்களில், முன்னா, சுமித்ராவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் நீதிபதி முன்னிலையில் திருமணமும் செய்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், திருமணமாகி ஒரு மாதம் கடந்த நிலையில், திடீரென சுமித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு, மாப்பிள்ளை வீட்டார்தான் காரணம் என்று சுமித்ராவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ''திருமணமான நாள் முதலாக ரூ.40 ஆயிரம் வரதட்சணை கேட்டு தொல்லை செய்தார்கள். பணம் தர 2 மாதம் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால், என் மகளை மனதளவிலும், உடல் ரீதியாகவும் அவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளனர்.
அவர்களால்தான் என் மகள் இறந்துவிட்டாள்,'' என்று தெரிவித்தார். அதேசமயம், மாப்பிள்ளை வீட்டார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ''சுமித்ரா தூக்கில் தொங்குவதை பார்த்து நான்தான் முதலில் அவளை காப்பாற்ற சென்றேன். ஆனால், காப்பாற்ற முடியவில்லை. எங்கள் மீது பொய் புகார் கூறுகிறார்கள்,'' என்று சுமித்ராவின் மாமியார் சீனா குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, சுமித்ராவின் சடலத்தை கைப்பற்றியுள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.