தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே விருப்பம் இன்றி திருமணம் செய்து வைத்ததால் திருமணமான 2 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தல் ஆழ்த்தி உள்ளது.
திருமணமாகி வெறும் 2 மாதங்கள்! கணவன், பெற்றோரை பதற வைத்த அபர்ணாவின் முடிவு!
தஞ்சை ஒரத்தநாடு அருகே தென்னமநாடு பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல். வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவரது மகன் கார்த்திக் என்பவருக்கும் சாலியமங்கலம் பகுதியை சேர்ந்த அபர்ணா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
விருப்பம் இல்லாமல் அபர்ணாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் சேர்ந்து வாழாமல் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காக திருமணம் ஆன 2 மாதத்திலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 28ம் தேதி அபர்ணா எலிபேஸ்ட் என்ற விஷம் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அபர்ணா மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அபர்ணா பரிதாபமாக உயிர் இழந்தார்.
மகள் பேச்சை கேட்காமல் திருமணம் செய்து வைத்து அவளை இழந்து விட்டோமே என பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை கோட்டாட்சியரும் அபர்ணா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.