வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளுடன் டிக் டாக் செயலியில் அறிமுகமான தோழியுடன் மாயமானதாக கூறப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளது.
நான் லெஸ்பியன் கிடையாது..! அபி என் கூட இப்போ பேசுறது இல்ல..! வினிதா வெளியிட்ட புதிய வீடியோ!

மாயமானதாக கூறப்படும் வினிதா தற்போது போலீசில் ஆஜரானதுடன் தான் ஓடிப்போனதற்கான விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தேவகோட்டையை சேர்ந்த வினிதா, ஆரோக்கிய லியோ இருவருக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் சிவகங்கையில் தனிக்குடித்தம் சென்ற நிலையில் கணவர் குடும்பத்தை காப்பாற்ற சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். தனிமையில் வாழ்ந்து வந்த வினிதா செல்போனில் அதிக நேரம் செலவழித்துள்ளார்.
அப்போது அவருக்கு டிக் டாக் செயலி மிகவும் பிடித்துப் போக அதிலேயே நீண்ட வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளிவந்தார். இந்த நிலையில் டிக் டாக் மூலம் திருவாரூரை சேர்ந்த அபி என்பவருடன் அறிமுகம் கிடைத்தது வினிதாவுக்கு.
செப்டம்பர் மாதம் தாயகம் திரும்பி மனைவியை பார்க்க ஆசை ஆசையாக வந்த கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வினிதாவின் செல்போனை ஆராய்ந்தபோது அதில் அபியுடன் நெருக்கமான போட்டோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து லியோ மாமியார் வீட்டில் சொல்லி அவர்களும் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் வினிதா திருந்தியபாடில்லை. இதற்கிடையே வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளைளுடன் வினிதா மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை வினிதாவின் குடும்பத்தினர் டிக்டாக் ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்க பிரச்சனை பூதாகரமானது. இவர்களின் வீடியோ அனைத்து சேனல்களிலும் நாள் முழுவதும் ஒளிபரப்பாக பயந்து போன வினிதா பிரச்சனை வேறு திசையை நோக்கி செல்வதின் அபாயத்தை உணர்ந்துள்ளார்.
பின்னர் நேற்று சிவகங்கை காவல் நிலையத்தில் வினிதா திடீரென ஆஜர் ஆனார். தான் வீட்டை விட்டு சென்றதற்காக காரணத்தையும் வீடியோவாக பதிவு செய்து மீண்டும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருநாள் கணவர் திடீரென சிங்கப்பூரில் இருந்து வந்ததாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி வந்தீர்கள் என கேட்டதற்கு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்னுடைய தோழி அபியுடன் பேசியதாகவும், கணவர் அடித்ததால்தான் அபியுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றதாகவும் வீடியோவில் கூறினார் வினிதா.
மேலும் அபி தனக்கு ஒரு நல்ல தோழி என்றும் அதை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறினர். அதெல்லாம் சரி அபி குடும்பத்தார் அந்தப் பெண்ணை கண்டிக்கவில்லையா என்ற கேள்விக்கு பதில் பின்னர் வந்தாலும் வரும்....