பாலத்தில் அமர்ந்து செல்ஃபி! பலமாக வீசிய காற்று! புது மனைவிக்கு கணவன் கண் முன் ஏற்பட்ட விபரீதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான சில மாதங்களே ஆன புதுப்பெண் செல்பி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.


மத்திய பிரதேச மாநிலத்தில் ரூபாலி என்பவருக்கும் ராகுல் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. ரக்ஷாபந்தன் விழாவை தனது சகோதரர் வீட்டில் கணவர் ராகுலுடன் சென்று கொண்டாடிய ரூபாலி பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது செல்லும் வழியில் கரை புரண்டோடும் ஆற்றை கண்ட ரூபாலி அதை ரசிப்பதற்காக பாலத்தின் மீது நின்றார். பின்னர் பாலத்தின் மீது நின்றுகொண்டு ரூபாலி செல்பி எடுக்க முயற்சித்தபோது காற்று பலமாக வீசியது.

காற்றை சமாளிக்க முடியாமல் தவறி ஆற்றில் விழுந்தார். அவர் திடீரென ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டதை  பார்த்த கணவர் ராகுல் செய்வதறியாத கதறி அழுதார்.நீச்சல் தெரியாததால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் ரூபாலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொதுவாக ஆற்றில் அளவுக்கு மீறி வெள்ளம் செல்லும்போது செல்பி எடுக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தும்போது அதையெல்லாம் பொருட்படுத்தாத செல்பி மோகம் உரை பலி வாங்கிவிடுவது சோகம்தானே