பிரசாந்த் கிஷோர் தி.மு.க.வில் நுழைந்ததில் இருந்து கட்சி முழுமையாக அவரது டீமின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது என்பதுதான் உண்மை. காலகாலமாக தி.மு.க.வில் உழைத்துவந்த கட்சியினருக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை என்பது உறுதியாகிவிட்டதாம்.
தி.மு.க.வில் புதிய கட்டுப்பாடு..! 50 வயதைக் கடந்த யாருக்கும் சீட் கிடையாதாம்..!

குறிப்பாக 50 வயதைக் கடந்த யாருக்கும் சீட் கொடுக்கக்கூடாது என்று ஒரு புதிய கட்டுப்பாடு தி.மு.க.வில் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்களில் அதிகம் பேர் தி.மு.க.வில்தான் சட்டசபை காலம் முடிவதற்குள் மரணம் அடைகிறார்கள். அப்படியொரு நிலை வரக்கூடாது என்று தான் இப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கிறதாம்.
அதையும் மீறி சீட் வேண்டும் என்று சொன்னால், இன்னும் 10 ஆண்டுகளுக்கு உடல் நலமாக இருக்கும் என்று மருத்துவ சர்டிஃபிகேட் கொடுத்தால்தான், சீனியர்களின் வேண்டுகோள் பரிசீலனை செய்யப்படுமாம்.
குறிப்பாக, இருதய நோய் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனைவருக்கும் நிச்சயம் சீட் கிடையாதாம். அதனால் கடுப்பாகும் நிர்வாகிகள், இப்போதே அ.தி.மு.க.வுக்குத் தாவலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.