மத்திய பொது பட்ஜெட், வரும், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படவுள்ள, இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
புதிய பட்ஜெட்..! வருமான வரி முறையில் வரப்போகும் மாற்றம் இதுதான்!

பொருளாதார மந்தநிலை நிலவி வரும் இந்த வேளையில். அதில் இருந்து மீள்வதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கார்ப்பரேட் வரி குறைப்பு, வராக்கடன் தள்ளுபடி. பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை மூலமாக வருமானம். பொதுமக்களிடம் இருந்து வரி என ஒவ்வொன்றாக செயல்படுத்தினாலும். இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.
தனி நபர் வரி செலுத்துவோர்களின் பல ஆண்டு கனவை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் முக்கிய சாரம்சங்கள் இருக்கும் என்ற ஆவல் வரி செலுத்துவோர் மத்தியில் உண்டாக்கியுள்ளது. பல்வேறு தரப்பு மக்களை ஈர்க்கும் வகையிலும், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், 2020 - 2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மக்களிடையை பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வருமான வரி முறையில் மாற்றம் செய்து, வருமான வரியில், 10 சதவீதம் வரை குறைப்பது பற்றியும், தற்போது நடைமுறையில் உள்ள உபரி வரி, கூடுதல் வரி உள்ளிட்டவற்றை நீக்கி, வரி விகித முறையை எளிமைபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறதாகவும்.
வரி சலுகையின் ஒரு பகுதியாக, வீடு வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள் . இதன் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள தேக்க நிலையிலும் மாற்றம் ஏற்படும் எனவும். ஏற்கனவே கட்டப்பட்ட அல்லது பாதியில் நிறுத்தப்பட்ட கட்டடங்கள் விற்பனை குறித்து ஆராயப்படுவதாக அறிய முடிகிறது.
மணியன் கலியமூர்த்தி