கடும் குளிர்! அழுகை சப்தம்! குடியாத்தம் ஏரிக்கரையில் துடித்த பச்சிளம் குழந்தை! பதற வைத்த சம்பவம்!

பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தையை வீசிவிட்ட சென்ற சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றுள்ளது.


குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அதிகாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. யாரோ ஒருவர் பழைய லுங்கியை போர்த்தி அந்த பச்சிளங்குழந்தையை அங்கு போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதை பார்த்த வாணிபக் கிடங்கின் காவலாளிகள் சுப்பிரமணி, செல்வம் ஆகியோர் பதறிப் போயினர்.

குளிரில் நடு நடுங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாணிபக் கிடங்கிற்குத் தூக்கிச்சென்று பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் தகவல்அறிந்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த குழந்தையை இருசக்கர வாகனத்தில் தூக்கிச்சென்று குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

3 கிலோ 800 கிராம் எடையுள்ள அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை வீசிவிட்டு சென்றது யார்? ஆந்திராவில் இருந்து வந்து யாராவது போட்டுவிட்டு சென்றார்களா என போலீஸ் விசாரித்து வருகிறது.

குழந்தையின் உதடு பிளவுபட்டிருப்பதால், அழகாக இல்லை என மனவேதனைப்பட்டு என்று குழந்தையை வீசிவிட்டு சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள குழந்தையைக் குடியாத்தம் தாசில்தார் சாந்தி நேரில் பார்வையிட்டு காவலாளிகளையும், காவல்துறையினரையும், அதிகாரிகளும் பாராட்டினர்.