இந்த பெல்ட்டை பெண்கள் இடுப்பில் கட்டிக் கொண்டால் போதும்..! யாராலும் ரேப் செய்ய முடியாது! எப்படி தெரியுமா?

சண்டிகார்: பெண்களின் பாதுகாப்பிற்காக, பலாத்காரத்தை தடுக்க புதிய பெல்ட்டை மாணவர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.


சண்டிகார் பல்கலைக்கழக மாணவர்கள், குயின் பெல்ட் என்ற பெயரில் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளனர். இந்த பெல்ட்டில் ஒரு மொபைல் சிம் கார்டை பொருத்தி, ஜிபிஎஸ் மூலமாக இயக்க முடியும். இதனை வழக்கமாக உடை அணிவதுபோல அணிந்துகொள்ளலாம். அத்துடன், ரகசிய குறியீட்டு எண்ணை பொருத்திக் கொள்ளலாம்.  

இந்த பெல்ட் அணிந்த பெண்ணை யாரேனும் வலுக்கட்டாயமாக, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றால், பெல்ட்டை துண்டித்தால்தான் பலாத்காரம் செய்ய முடியும். அதற்காக, பெல்ட்டை வலுக்கட்டாயமாக துண்டிக்க குற்றவாளிகள் முயற்சிப்பார்கள். அப்படி செய்தால், பெல்ட் மூலமாக, ஜிபிஎஸ் வழியே உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

அவர்கள் ஜிபிஎஸ் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண் உள்ள இடத்தை கண்டறிந்து காப்பாற்ற முடியும். இதனை ஒரு மொபைல் ஆப் மூலமாகவும் இயக்க முடியும் என்று சண்டிகார் பல்கலை மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.