சுகோய் போர் விமானங்களுடன் தமிழகத்தின் தஞ்சையில் புதிய வான் படைப் பிரிவு..! விமான படைத் தளபதி அறிவிப்பு! ஏன் தெரியுமா?

டெல்லி: தஞ்சாவூரில் சுகோய் போர் விமானங்களை நிறுத்துவது நல்ல பலன் தரும் என்று விமானப் படை தளபதி பகதாரியா தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூரில் முதல்முறையாக சுகோய் 30 ரக போர் விமானங்களை கொண்ட ஒரு படை அணியை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விமானப் படை தளபதி பகதாரியா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ''முதல்முறையாக தஞ்சாவூரில் சுகோய் 30 ரக போர் விமானங்களை கொண்ட சிறு படை அணியை நிறுத்துவது நல்ல பலன் தரும். தென் பிராந்திய அளவில் விமானப் படையை வலிமைப்படுத்த இது உதவும்.

தென்பிராந்திய விமானப்படையின் ஒரு அங்கமாக தஞ்சாவூர் விமானப் படைத்தள அணி இருக்கும். சுகோய் 30எம்கேஐ போர் விமான அணி கடலோர காவல் கண்காணிப்பை முதன்மைப் பணியாகச் செய்யும், பின்னர் மற்ற பாதுகாப்புப் பணிகளிலும் கவனம் செலுத்தும்,'' எனக் குறிப்பிட்டார்.