நெல்லையில், 80 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலியான ஆவணங்கள் மூலமாக அபகரித்த வழக்கில் விசாரணை தீவிரபடுத்த மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கபட்டோர் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முதியவரின் ரூ.80 லட்சம் சொத்தை அபகரித்த திமுக முன்னாள் எம்எல்ஏ! விசாரணை தீவிரம்!
பாளையங்கோட்டையைச் சேர்ந்த தாமோதரனுக்கு ராதாபுரம் குடியிருப்பில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிக்கதக்க 10 செண்ட் நிலம் இருந்ததாகவும், இதனை திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு உள்ளிட்ட 4 பேர் போலி ஆவணம் தயார் செய்தது மூலமாக ஏமாற்றி பத்திரப்பதிவு செய்துவிட்டதாகவும் தாமோதரன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது 4 பேர் மீதும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டதின் படி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி சொத்தை மீட்டுக்கொடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்ட தாமோதரன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.திமுக எம்.எல்.ஏ மீதான இந்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.